ADDED : நவ 07, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நகராட்சி கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் ரூ.2 லட்சத்தில் கொசுக்களை அழிக்கும் புகை பரப்பிகள், ரூ. 2 லட்சத்திற்கு கொசுபுழு உற்பத்தியை தடுக்க மருந்து,
ரூ.5 லட்சத்தில் காலை உணவு திட்டம், அறிவு சார் மையம் மற்றும் நுாலகத்தை சுற்றி வேலி அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறியாளர் முத்துக்குமார், கிளார்க் ஜோதி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.