/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்ட விரோதமாக குழந்தையை தத்து கொடுத்த தாய் உட்பட 4 பேர் கைது
/
சட்ட விரோதமாக குழந்தையை தத்து கொடுத்த தாய் உட்பட 4 பேர் கைது
சட்ட விரோதமாக குழந்தையை தத்து கொடுத்த தாய் உட்பட 4 பேர் கைது
சட்ட விரோதமாக குழந்தையை தத்து கொடுத்த தாய் உட்பட 4 பேர் கைது
ADDED : நவ 28, 2025 11:29 PM
மதுரை: மதுரை, கீரைத்துறையைச் சேர்ந்த 21 வயது பெண், 2021ல் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். இவருக்கு 5 வயது மகன் உள்ள நிலையில், ஏழு மாதங்களுக்கு முன் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப பிரச்னையால் கணவர் தற்கொலை செய்ததால், அப்பெண் ஆதரவற்ற நிலையில், இரு பிள்ளைகளையும் வளர்க்க சிரமப்பட்டார்.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், 'மதுரை ஹீரா நகர் ஆட்டோ டிரைவர் ரபீக் ராஜா, அவரது மனைவி ரெஜினாவுக்கு குழந்தை இல்லை. அவர்களுக்கு தத்து கொடுக்க விருப்பமா?' என அப்பெண்ணிடம் கேட்க, குடும்ப சூழல் காரணமாக அவரும் சம்மதித்தார்.
அந்த தம்பதி, குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்து வளர்த்தனர். இது குறித்து, குழந்தை நலக் குழுமத்திற்கு புகார் கடிதம் சென்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் குருபிரகாஷ் புகாரில், குழந்தையின் தாய், பாட்டி, தத்தெடுத்த ரபீக் ராஜா, ரெஜினா ஆகியோரிடம் தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். குழந்தை காப்பகத்தில் உள்ளது.