/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளி 'போதையில்' அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல்; பெண் உட்பட 4 பேர் காயம்
/
தீபாவளி 'போதையில்' அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல்; பெண் உட்பட 4 பேர் காயம்
தீபாவளி 'போதையில்' அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல்; பெண் உட்பட 4 பேர் காயம்
தீபாவளி 'போதையில்' அடுத்தடுத்து கொலைவெறி தாக்குதல்; பெண் உட்பட 4 பேர் காயம்
ADDED : நவ 03, 2024 04:14 AM
மதுரை,: மதுரை நகரில் தீபாவளி பண்டிகையை மது போதையுடன் கொண்டாடியதில் ஏற்பட்ட தகராறில் அடுத்தடுத்து பாட்டில் குத்து விழுந்தது.
மதுரை காமராஜர்புரம் குமாரவேல் 66. தீபாவளியன்று வீட்டின் முன் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பக்கத்து தெருவில் வசிக்கும் இளைஞர்கள் சிலர், குமாரவேல் வீட்டின் முன் வெடி வெடித்ததில் குடும்பத்தினர் மேல் பட்டது. குமாரவேல் கண்டித்ததால் ஆத்திரமுற்ற அவர்கள், சிறிது நேரம் மது பாட்டிலுடன் ஆபாசமாக பேசினர். குமாரவேல் தலையில் பாட்டிலை உடைத்து தாக்கினர். குடும்பத்தினர் தடுத்தனர். அக்கா கருப்பாயி கையில் பாட்டிலால் கீறி மிரட்டினர். இதுதொடர்பாக லோகேஸ்வரன், பரத்சந்தோஷ் 19, சரவணன், ரமேஷ்கண்ணன் 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கோச்சடை முத்துக்குமார் 37. மின்மயான ஊழியர். மயானத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், விக்கி, காளிமுத்துக்குமார், கண்ணன் ஆகியோர் மது அருந்தினர். இதை முத்துக்குமார் கண்டிக்கவே, ஆத்திரமுற்ற அவர்கள் மது பாட்டிலால் தலையில் அடித்தும், கழுத்தில் குத்தியும் 'இந்த சுடுகாட்டிலேயே உன்னை எரித்துக்கொன்றுவிடுவோம்' என மிரட்டினர். இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
செல்லுார் சுயராஜ்யபுரம் வீரபாண்டி 28. இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. வெளியூரில் வசிக்கிறார். தீபாவளிக்காக செல்லுார் வந்தவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, சத்தம் போட்டு வீரபாண்டி அனுப்பினார். வீடு தேடி வந்து வீரபாண்டியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபு, கணேசன் 24, சூர்யா 22 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.