/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
40 / 960 எண்பது சதவீதம் நிரம்பிய கண்மாய்கள் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்
/
40 / 960 எண்பது சதவீதம் நிரம்பிய கண்மாய்கள் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்
40 / 960 எண்பது சதவீதம் நிரம்பிய கண்மாய்கள் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்
40 / 960 எண்பது சதவீதம் நிரம்பிய கண்மாய்கள் தயார் நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்
ADDED : நவ 07, 2024 02:26 AM
மதுரை: 'மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 960 கண்மாய்களில் 40 கண்மாய்கள் 80 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளன. மழைக்கால நோய்கள் பரவாமல் இருக்க 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை துவங்கியபின் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்கிறது. மழைக்காலத்தில் சுகாதார கேடு உட்பட திடீர் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மாவட்ட கண்காணிப்பாளர் அருண்தம்புராஜ் ஆலோசனை வழங்கினார். கலெக்டர் சங்கீதா உத்தரவுப்படி, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா ஏற்பாட்டில் அனைத்து ஒன்றியங்களிலும் எந்தெந்த துறையினரை பயன்படுத்த முடியும், பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைப்பது, உள்ளூர் தொடர்பு எண்கள் உட்பட அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் 200 மணல் மூடைகள், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற 5 எச்.பி., திறன்கொண்ட 2 பம்புகள், 1.5 எச்.பி.,திறன் கொண்ட 5 பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் தண்ணீர் தேங்கிய இடங்களை, கண்மாய் கண்டறிந்து பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகளை வைத்து கரைகளை பலப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊராட்சிகளுக்கு சொந்தமான 960 கண்மாய்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் நிரம்பியுள்ள 40 கண்மாய்களை கண்காணித்து வருகின்றனர். கிராமம்தோறும் சுகாதார கேடு, நோய் தொற்றை தடுக்க ஊராட்சிகளில் 25 கிலோ பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தயார் நிலையில் உள்ளது.
ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்த் கூறுகையில், ''ஊராட்சிகளில் துாய்மைப் பணியாளர், துாய்மைக் காவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.
மழைக்கால நோய் பாதிக்காதவாறு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுகிறது. கிராமங்களில் விரிவாக்க பகுதி காலியிடங்களில் தண்ணீர் சூழ்ந்திருப்பதாக புகார்கள் வந்தன. அவற்றை மோட்டார் வைத்து வெளியேற்றியுள்ளோம். அதுபோன்ற புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்'' என்றார்.
கிராமம்தோறும் சுகாதாரக்கேடு, நோய் தொற்றை தடுக்க ஊராட்சிகளில் 25 கிலோ பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தயார் நிலையில் உள்ளது.