/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர், துணைமுதல்வர் வருகை பாதுகாப்புக்கு 4 ஆயிரம் போலீசார்
/
முதல்வர், துணைமுதல்வர் வருகை பாதுகாப்புக்கு 4 ஆயிரம் போலீசார்
முதல்வர், துணைமுதல்வர் வருகை பாதுகாப்புக்கு 4 ஆயிரம் போலீசார்
முதல்வர், துணைமுதல்வர் வருகை பாதுகாப்புக்கு 4 ஆயிரம் போலீசார்
ADDED : ஜன 14, 2026 06:54 AM

அலங்காநல்லுார்: மதுரையில் ஜன.16ல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதியும், 17ல் அலங்காநல்லுாரில் முதல்வர் ஸ்டாலினும் போட்டிகளை துவக்கி வைக்க உள்ளனர்.
இதற்காக மதுரையில் முதல்வர், துணை முதல்வர் தங்கும் ஓட்டலில் இருந்து கே.புதுார், கடச்சனேந்தல், ஊமச்சிகுளம் வழியாக பாலமேடு, அலங்காநல்லுார் வர உள்ளனர். காலை 8:00 மணிக்குள் போட்டியை துவக்கி வைத்துவிட்டு ஒரு மணி நேரம் போட்டியை பார்த்து திரும்ப உள்ளனர்.
முதல்வர், துணை முதல்வருக்காக 2 நாட்களும் வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்களை நிறுத்தி உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் மூர்த்தி ஆலோசனை வழங்கியுள்ளார். இரண்டு நாட்களும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல்வர் வருகையையொட்டி அலங்காநல்லுார், பாலமேட்டில் விழா ஏற்பாடு , பாதுகாப்பு பணிகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன் குமார், எஸ்.பி.,அரவிந்த், எம்.எல்.ஏ.,வெங்கடேசன் ஆய்வு செய்தனர்.
ஆர்.டி.ஓ., கருணாகரன், தி.மு.க., நகர, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, தன்ராஜ், முத்தையன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணைத்தலைவர் சாமிநாதன், விழா குழுவினர், மடத்து கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

