ADDED : நவ 03, 2024 04:35 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகளவாக பெரியபட்டியில் 40.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,): மதுரை வடக்கு 4.8, தல்லாகுளம் 6.4, விரகனுார் 0.2, சிட்டம்பட்டி 12.6, கள்ளந்திரி 6, தனியாமங்கலம் 21, மேலுார் 7, புலிப்பட்டி 10.8, வாடிப்பட்டி 25, சோழவந்தான் 2, சாத்தையாறு அணை 1.2, மேட்டுப்பட்டி 20, டி.ஆண்டிபட்டி 8.2, விமான நிலையம் 2.7.
பெரியாறு அணை நீர் மட்டம் 123.3 அடி உள்ளது (மொத்த உயரம் 152 அடி). அணையில் 3281 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1339 கன அடி உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணை நீர் மட்டம் 61.15 அடி (மொத்த உயரம் 71 அடி). அணையில் 3828 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 2120 கன அடி. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 69 கன அடி.
சாத்தையாறு அணை நீர் மட்டம் 29 அடி (மொத்த உயரம் 29 அடி). 56 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 25 கன அடி. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.