ADDED : மார் 13, 2024 01:00 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஒன்றியம் இ.நடுப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 45 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த குடியிருப்புகளுக்கான பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தவிர பஞ்சமி நிலத்தையும், செவுல் ஊருணியை மீட்டுதரக்கோரியும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் மதுரைவீரன், பொறுப்பாளர் அறிவாளன் தலைமையில் தாலுகா அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்திற்கு வந்தனர். 14 பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
