ADDED : ஆக 06, 2025 01:16 AM
மதுரை; மதுரை மாவட்டத்தில் 2 நாட்களாக மதுரையைச் சுற்றி மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு (மி.மீ.,யில்):
மதுரை வடக்கு- 25.4, தல்லாகுளம் 22.6, பெரியபட்டி 45.2, விரகனுார் 0.4, சிட்டம்பட்டி 7.2, கள்ளந்திரி 53, இடையபட்டி 31, தனியாமங்கலம் 8, மேலுார் 4.2, புலிப்பட்டி 4, சாத்தையாறு அணை 2, மேட்டுப்பட்டி 47.6, ஆண்டிப்பட்டி 0.8, பேரையூர் 4.6, எழுமலை 0.8, கள்ளிக்குடி 12.24.
அணையில் நீர்மட்டம் பெரியாறு அணையில் 133.95 அடி (மொத்த உயரம் நீர்மட்டம் உள்ளது. நீர் இருப்பு 5621 மில்லியன் கனஅடி. நீர்வரத்து வினாடிக்கு1322 கனஅடி. வினாடிக்கு 1867 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 68.9 அடி. (மொத்த உயரம் 71 அடி). நீர்இருப்பு 5546 மில்லியன் கனஅடி. நீர்வரத்து வினாடிக்கு 1577 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 569 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 5.1 அடி(மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர்இருப்பு 2.94 மில்லியன் கனஅடி. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை.