/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.ஆர்.பி., தேர்வு 462 பேர் 'ஆப்சென்ட்'
/
டி.ஆர்.பி., தேர்வு 462 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 13, 2025 03:50 AM
மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 35 மையங்களில் நடந்தது.
மாவட்டத்தில், தமிழ், ஆங்கிலம் உட்பட 14 பாடங்களுக்கு 9,587 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வில் 9,125 பேர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டனர். காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு நடந்தது. சில மையங்களில் ஆதாரில் விண்ணப்பதாரர்கள் போட்டோ 'அப்டேட்' செய்யப்படாததால் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தேர்வுப் பணிகளை மாவட்ட நோடல் அலுவலரான இணை இயக்குநர் வை.குமார் பார்வையிட்டார்.