ADDED : ஏப் 13, 2026 05:22 PM

மேலுார்: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்து இருந்தது. இதன்படி விண்ணப்பித்தோருக்கு நேற்று முதல் ஓட்டுக்களை பதிவு செய்யும் பணி துவங்கியது.
மேலுார் சட்டசபை தொகுதியில் 183 மாற்றுத்திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்டோர் 304 பேரும் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
நேற்று கல்லம்பட்டியில் துவங்கிய தபால் ஓட்டுப் பதிவை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமார், தேர்தல் அலுவலர் சங்கீதா ஆய்வு செய்தனர். இரண்டு நாள் நடைபெறும் தபால் ஓட்டுப் பதிவுக்காக உதவித் தேர்தல் அலுவலர் லயனல் ராஜ்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட 10 குழுவினர் தபால் ஓட்டுகளை ஓட்டுப் பதிவுக்கு விண்ணப்பித்தோர் வீடுகளுக்குச் சென்று பதிவு செய்தனர்.
