/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அருகே டூவீலர் மீது கார் மோதி 6 பேர் பலி
/
மதுரை அருகே டூவீலர் மீது கார் மோதி 6 பேர் பலி
UPDATED : ஏப் 10, 2024 01:16 PM
ADDED : ஏப் 10, 2024 08:46 AM

திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது கார் மோதியதில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தையுடன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வழியில், திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை 4 வழிச்சாலையை பாண்டி என்ற கொய்யாப்பழ வியாபாரி டூவிலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, டூவிலர் மீது மோதிய கார், அருகில் இருந்த பேரிகார்டு மீதும் மோதியதுடன் அங்கிருந்த தடுப்புச்சுவரிலும் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் காரில் இருந்த கனகவேல் உள்ளிட்ட 4 பேரும், பாண்டியும் உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 10 வயது சிறுமியும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

