தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 50 ஓவர் கிரிக்கெட் போட்டி

 50 ஓவர் கிரிக்கெட் போட்டி

 50 ஓவர் கிரிக்கெட் போட்டி


ADDED : மே 28, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சேது கிரிக்கெட் பவுண்டேஷன், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கிறது. மதுரைக் கல்லுாரியில் நடந்த போட்டியில் எம்.டி.சி.ஏ., பிரசிடென்ட், சேது அணிகள் மோதின.

எம்.டி.சி.ஏ., அணி 35.1 ஓவர்களில் 121 ரன் எடுத்தது. ஓவிஷ் ரஞ்சித் 40 ரன் எடுத்தார். அனிருத் 3, நிரஞ்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து ஆடிய சேது அணி 21.1 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்தரன் 36, பிரகதீஸ் 38 ரன் எடுத்தனர்.

நல்லமணி பள்ளியில் நடந்த போட்டியில் ஏசியாடிக் கிரிக்கெட் டிரான்ஸ்பார்மர்ஸ் அணி 43 ஓவர்களில் 138 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சேலம் எஸ்.கே.ஏ., அணி 15.5 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆத்ரேயா 80 (நாட்அவுட்), தானவ் 55 ரன் எடுத்தனர். சோலமலை கல்லுாரியில் நடந்த போட்டியில் பிரபாகரன் அணி 45.3 ஓவர்களில் 227 ரன் எடுத்தது. ஷகில் 48, ரபான் 63 (நாட்அவுட்) ரன் எடுத்தனர். யுகன் 3, திவேஷ் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய எஸ்.ஆர்.எஸ்.ஏ., அணி 24.4 ஓவர்களில் 111 ரன்னுடன் தோற்றது. சுஜன் 48 ரன், ஷகில் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மாணிக்கம் ராமசாமி கல்லுாரியில் நடந்த போட்டியில் டி.சி.ஏ., ஈரோடு அணி 50 ஓவர்களில் 290 ரன் எடுத்தது. ஸ்ரீகுரு சின்னப்பன் 95, நிதிஷ் 46, சச்சின் சாய் ஸ்ரீராம் 38, சந்தோஷ் பிரகாஷ் 34, தேவ்நிஷாந்த் 32 ரன் எடுத்தனர். அடுத்து ஆடிய ஓ.ஜி.எப்., அணி 38.2 ஓவர்களில் 158 ரன் எடுத்தது. ஸ்ரீனிவாஸ் 53 ரன், நிஷாந்த் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us