தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மேட்டுப்பட்டியில் 55 மி.மீ., மழை

மேட்டுப்பட்டியில் 55 மி.மீ., மழை

மேட்டுப்பட்டியில் 55 மி.மீ., மழை


ADDED : செப் 21, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கோடை வெப்பம் செப்டம்பர் வரை நீடித்து வருகிறது. பகலில் அனல் அதிகமாக உள்ளதால் மக்கள் மன, உடல் புழக்கத்தில் உள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக அந்தி மாலையில் மழை பெய்கிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவும் நீண்ட நேரமாக மழை பெய்தது. மாவட்ட அளவில் பல இடங்களில் நல்லமழை பெய்துள்ளது. இதனால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. மழையளவு விவரம் (மி.மீ.,யில்) வருமாறு: மதுரை வடக்கு– 26.8, தல்லாகுளம்– 23, சிட்டம்பட்டி – 25.2, கள்ளந்திரி 29, இடையபட்டி 10, தனியாமங்கலம் 17, மேலுார்– 28.2, புலிப்பட்டி 36.6, வாடிப்பட்டி 35, சோழவந்தான்– 22, சாத்தையாறு அணை– 41, மேட்டுப்பட்டி 55.6, ஆண்டிப்பட்டி 52, உசிலம்பட்டி 15, குப்பணம்பட்டி 7.2, விமான நிலையம் 19, திருமங்கலம் 13.2, பேரையூர்– 15.2, எழுமலை 34.1, கள்ளிக்குடி– 8.

அணைகளில் நீர்மட்டம்: பெரியாறு அணையின் நீர்மட்டம் – 118.20 (மொத்த உயரம் 152), அணையில் 2303 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 297 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 600 மில்லியன் கனஅடி வெளியேறுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் – 42.16 அடி (மொத்த உயரம் 71). அணையில் 1130 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 309 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us