ADDED : மார் 27, 2026 09:49 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இந்த கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடக்கிறது. வரும், 31ம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மது கடைகளுக்கு விடுமுறை.
தேர்தலை முன்னிட்டு ஏப்., 21, 22, 23 ஆகிய நாட்களும், மே, 1 தொழிலாளர் தினத்தை ஒட்டியும், மே 4 ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டும், மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
