ADDED : பிப் 28, 2024 04:39 AM
உசிலம்பட்டி,: பிரதமர் மோடி மதுரை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்கத்தினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
எம்.எஸ் சுவாமிநாதன் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையின் படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். டில்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவின் மாநில கவுரவ தலைவர் ராமன், ஐக்கிய விவசாயிகள் சங்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆதிமூலம், விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சிவகங்கை மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம், மதுரை தலைவர் பொன் மணிகண்டன், செயலாளர் துரைச்சாமி, திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் உக்கிரபாண்டியன் ஆகியோரை செக்கானுாரணி போலீசார் கைது செய்தனர்.
