ADDED : செப் 09, 2026 03:56 AM

மதுரை: மதுரை சம்மட்டிபுரம் பார்த்தசாரதி 34, சரத்குமார் கோஷ்டியினரிடையே கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் ஏற்பட்டது. பார்த்தசாரதியை சரத்குமார், நாகேந்திரன் சேர்ந்து வெட்டினார். பார்த்தசாரதி காயமடைந்தார்.
இம்முன்விரோதத்தில் நாகேந்திரனின் சகோதரர் சுஜேந்திரனை 2016ல் பார்த்தசாரதி தரப்பினர் கொலை செய்தனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர்.மதுரை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி உதயவேலவன் விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பார்த்தசாரதி, முடக்குசாலை டி.முத்துபாண்டி36, பிரகாஷ்37, சம்மட்டிபுரம் கே.முத்துபாண்டி 33, சுரேஷ் கண்ணன் 35, பெத்தானியாபுரம் கார்த்திக் 37, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பார்த்தசாரதிக்கு ரூ.11 ஆயிரம், மற்றவர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது, என்றார்.
