தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது

ஆயுதங்களுடன் சுற்றிய 6 பேர் கைது


ADDED : ஆக 21, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகரில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்படி, இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை நடத்துகின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு வண்டியூர் செக்போஸ்டில் வாகன சோதனையில் அவ்வழியே ஆட்டோவில் வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அண்ணாநகர் போலீசார் நால்வரையும் பிடித்து 3 வாள்கள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அண்ணாநகரை சேர்ந்த ராஜா, 33, யாகப்பா நகர் சேர்ந்த சூரியபிரகாஷ், 26, சதீஷ்ராஜ், 23, செண்பகத் தோட்டம் சேர்ந்த விஜய், 38, என்பதும் தெரியவந்தது. நால்வரும் ஆயுதச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் நேற்று மாடக்குளம் போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இதில் தப்பியோட முயன்ற செய்த அழகரடி பகுதியைச் சேர்ந்த ஜீவகனை, 22, பிடித்து விசாரித்தபோது அவர் மறைத்து வைத்திருந்த வாளை பறிமுதல் செய்தனர். வைகை வடகரையில் ஆரப்பாளையத்தை சேர்ந்த சல்மான், 23, என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவர் மறைத்து வைத்திருந்த வாளும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us