ADDED : அக் 15, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட மதுரை கைதிகள் பலர் சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தனர்.
டி.ஐ.ஜி., முருகேசன், எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான குழு, இதற்கு முன் பரோலில் சென்றபோது கைதி நடந்துக்கொண்ட விதம், நன்னடத்தை போன்றவை குறித்து ஆய்வு செய்தது. இதில் 65 பேருக்கு பரோல் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதன்முறையாக விண்ணப்பித்தவர்களுக்கு 6 நாட்களும், ஏற்கனவே சென்று வந்தவர்களுக்கு 3 நாட்களும் பரோல் வழங்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.