தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/71 டன் ரோட்டோர மணல் அகற்றம்

71 டன் ரோட்டோர மணல் அகற்றம்

71 டன் ரோட்டோர மணல் அகற்றம்


ADDED : பிப் 03, 2024 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் ரோட்டோரங்களில் தேங்கியிருந்த 70. 836 டன் மணல் அகற்றப்பட்டது.

மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் ரோட்டோரம் தேங்கிய மணலை அகற்றும் சிறப்பு பணி நேற்று துவங்கி பிப்.,5 வரை நடக்கிறது. பொன்மேனி பகுதியில் இப்பணியை கலெக்டர் சங்கீதா, கமிஷனர் மதுபாலன் துவக்கி வைத்தனர்.

மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் 400 பேர் ஈடுபட்டு 27.9 கி.மீ., துாரம் தேங்கியிருந்த மணல் அகற்றப்பட்டது. ஐந்து மண்டலங்களிலும் 70.838 டன் மணலை அகற்றி வெள்ளைக்கல் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக் கழகம் அருகில் யங் இந்தியா குழு சார்பில் சோலைமலை, எஸ்.வி.என்., சேது பொறியியல் கல்லுாரிகளின் 180 மாணவர்கள் மணல் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி துணை கமிஷனர் சரவணன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us