ADDED : அக் 14, 2026 05:58 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர்கள் 73 பேருக்கு அமைப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சத்துணவுத் திட்டத்தில் சில ஆண்டுகளாக ஊழியர்கள் பதவி உயர்வின்றி பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அளவில் 1410 பணியிடங்களில் 892 அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, செயலாளர் மாரி, நிர்வாகி மாரியப்பன் உட்பட பலர் மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சத்துணவு சமையலர், உதவியாளர்கள் 73 பேருக்கு அமைப்பாளராக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் உத்தரவிட்டார். கல்வித்தகுதி அடிப்படையில் சமையல் உதவியாளராக 10 ஆண்டுகள், சமையலராக 5 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
