ADDED : மார் 19, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்துவதாக வி.ஏ.ஓ., காளிதாசுக்கு தகவல் கிடைத்தது.
அவர் அந்த லோடு ஆட்டோவை மறித்த போது, அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். ஆட்டோவில் இருந்த 756 கிலோ அரிசியை பறிமுதல் செய்து, தாசில்தார் செல்லப்பாண்டியிடம் ஒப்படைத்தார்.
