/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
77 டாக்டர்கள் ராஜினாமாவுக்கு ரெடி மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு நெருக்கடி

ADDED : அக் 14, 2024 07:51 AM
கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி பெண் டாக்டர் படுகொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டாக்டர்கள் மேலும் 77 பேர் கூட்டாக ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தனர். இதனால் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இக்கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் ஆக.,9 பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
தற்போது கல்யாணி ஜெ.என்.எம் மருத்துவமனை டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாக 77 பேர் மேற்கு வங்க சுகாதார பல்கலைகழகத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர்.
கல்யாணி ஜெ.என்.எம் டாக்டர்கள் கூறியதாவது:
இளம் டாக்டர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உடல்நிலை மோசமாகி வருகிறது. மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. உடனே தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இல்லையென்றால் இன்று (அக்., 14) கூட்டாக 77 பேர் ராஜினாமா செய்வோம் என்றனர்.
மேலும் 77 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாக கூறி இருப்பது மம்தா அரசுக்கு மேலும் தலைவலியை அதிகப்படுத்தியுள்ளது.