தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 78 உதவி ஜெயிலர்கள் இடமாற்றம்

 78 உதவி ஜெயிலர்கள் இடமாற்றம்

 78 உதவி ஜெயிலர்கள் இடமாற்றம்


ADDED : செப் 05, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கடந்த தி.மு.க., ஆட்சியில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த மகேஸ்வர் தயாள், நிர்வாக காரணங்கள் எனக்கூறி காவலர்கள், உதவி ஜெயிலர்களை பல, 100 கி.மீ., துாரமுள்ள சிறைகளுக்கு இடமாற்றினார். இதனால் அவர்களும், குடும்பத்தினரும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றதும் இத்துறை தலைவராக சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

அவரிடம் சிறை காவலர்கள், உதவி ஜெயிலர்கள் முறையிட்டதை தொடர்ந்து 'போர்டு' அமைத்து, இடமாறுதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன், புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தபோது, அவரிடம் இடமாறுதல் குறித்து, உதவி ஜெயிலர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து உதவி ஜெயிலர்கள், 78 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் இடமாறுதல் வழங்கி, சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us