ADDED : நவ 08, 2024 07:27 AM
மதுரை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்தாண்டில் வங்கிக் கடன் இணைப்பு திட்டம் மூலம் மொத்தம் ரூ.1440 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (அக்டோபர்) வரை 9694 பெண்களுக்கு ரூ.816.77 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் 4533 குழுக்களுக்கு ரூ.385.10 கோடி, நகர்ப்பகுதியில் 5161 குழுக்களுக்கு ரூ431.67 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இப்பெண்கள் சுயதொழில் துவங்க வசதியாக இடவசதி, இயந்திரங்களை அமைத்துக் கொடுத்துள்ளது. மேலும் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் மகளிர் குழு என்ற பெயரில் சிறுதொழில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை துவங்கும் முன் அதற்கான பயிற்சி, மூலதன பொருட்களை வாங்குவதற்கு ரூ.1.30 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்கள் மகளிர் குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் இத்தகைய உதவிகளை பெற இயலும்.