/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துாய்மைப் பணியாளருக்கு ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை
/
துாய்மைப் பணியாளருக்கு ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை
ADDED : பிப் 16, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் அனைத்து யூனியன்களில் இருந்தும் 214 துாய்மைப் பணியாளர்கள் சென்று 5 நாட்கள் சேவை அடிப்படையில் பணியாற்றினர். அவர்களுக்கு கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா மொத்தம் ரூ.8.56 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.