/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் போட்டோவை ஆபாசமாக சித்தரித்த சிறுவன், வாலிபர் கைது
/
பெண் போட்டோவை ஆபாசமாக சித்தரித்த சிறுவன், வாலிபர் கைது
பெண் போட்டோவை ஆபாசமாக சித்தரித்த சிறுவன், வாலிபர் கைது
பெண் போட்டோவை ஆபாசமாக சித்தரித்த சிறுவன், வாலிபர் கைது
ADDED : அக் 26, 2024 08:50 PM

மதுரை:மதுரை மாவட்டம், மேலுார் பகுதி கல்லுாரி மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில், அவரது ஆபாச படம் 'அப்டேட்' செய்யப்பட்டிருந்தது. மாணவியை தொடர்பு கொண்ட ஒருவர், அப்படத்தை அழிக்க, 10,000 ரூபாய் வேண்டும் என, மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். மாவட்ட எஸ்.பி., அரவிந்திடம் புகார் செய்யப்பட்டது.
'சைபர் கிரைம்' போலீஸ் விசாரணையில், மாணவி படத்தை இன்ஸ்டாகிராமில் எடுத்து, அதை ஆபாசமாக 'மார்பிங்' செய்து பணம் கேட்டது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பாலமுரளி, 19, மற்றும் பிளஸ் 2 படிக்கும் 16 வயது சிறுவன் என, தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்தனர். பாலமுரளியை மதுரை சிறையிலும், சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.
எஸ்.பி., அரவிந்த் கூறுகையில், ''மாணவிக்கும், பாலமுரளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பாலமுரளி அவராக இன்ஸ்டாகிராமில் பெண்களின் போட்டோக்களை தேடி, நண்பரான, 16 வயது சிறுவனிடம் கொடுத்துஉள்ளார்.
போட்டோக்களை சிறுவன் ஆபாசமாக 'மார்பிங்' செய்து கொடுத்துள்ளார்.
பின், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அப்படத்தை அனுப்பி, பணம் கேட்டு இருவரும் மிரட்டியுள்ளனர். சிலர் பயந்து பணம் கொடுத்துள்ளனர்; இவர்கள் யார், யாரை மிரட்டினர் என விசாரித்து வருகிறோம்,'' என்றார்.