UPDATED : நவ 30, 2026 12:55 AM
ADDED : நவ 30, 2026 12:55 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சிந்தாமணியை சேர்ந்தராஜசேகரின் நான்கு வயது மகன் ருத்ரன் ராணா, 15 கி.மீ., தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டி உலகசாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கோபிசன், மாமதுரையர் அமைப்பு தலைவர் திருமுருகன், தொழிலதிபர் மணிகண்டன் இம்முயற்சியை தொடக்கி வைத்தனர்.நத்தம் பறக்கும் பாலத்தில் இருந்து தல்லாகுளம் வரை 15 கி.மீ., துாரத்தை சைக்கிளில் 90 நிமிடங்களில்சிறுவன் எட்டினார்.
இளம் வயதில் இத்தகைய சவாலான முயற்சியில் சிறுவன் ஈடுபட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஷேக் முகம்மது, சிறுவனுக்கு உலக சாதனை அங்கீகாரச் சான்றிதழ் வழங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பூரண கிருஷ்ணன், தங்கமணி ஏற்பாடுகளை செய்தனர்.
