ADDED : செப் 26, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் தொடர்கிறது.
இங்குள்ள ஆண்டிபட்டி பங்களா அருகே வைகை பெரியாறு பாசன கிளை ஓடை மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடந்து செல்கிறது. இந்த ஓடைப் பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் உருளை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் வேன், கார்கள் தடுப்புகளை தகர்த்து ஓடைக்குள் பாய்ந்தன.
இவ்வழியாக சென்றுவரும் வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேதமடைந்த தடுப்புகளை சீரமைத்து பராமரிக்க வேண்டிய கொடைரோடு டோல்கேட் நிர்வாகம் வாகனங்களில் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

