தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இரட்டை ரயில் பாதை அமைக்க வழக்கு

இரட்டை ரயில் பாதை அமைக்க வழக்கு

இரட்டை ரயில் பாதை அமைக்க வழக்கு


ADDED : பிப் 24, 2024 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2024 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : தஞ்சாவூர் ஜீவகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: விழுப்புரம்- தஞ்சாவூர் வரை ஒற்றை ரயில் பாதையாக உள்ளது. இது சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணத்தை இணைக்கிறது. இவ்வழித்தடத்தை இரட்டை அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே துறை ஆய்வு செய்தது. கும்பகோணம் மகாமகம் திருவிழா 2028 ல் நடைபெற உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவர்.

விழுப்புரம்- தஞ்சாவூர் இடையே மயிலாடுதுறை வழியாக இரட்டை அகல ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி ரயில்வேத்துறை செயலர், ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரி 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us