/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் கிறிஸ்துமஸ் : சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம்
/
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் கிறிஸ்துமஸ் : சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம்
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் கிறிஸ்துமஸ் : சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம்
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் கிறிஸ்துமஸ் : சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம்
ADDED : டிச 25, 2025 07:00 AM

இ றைவன் மனிதனாக பிறந்த மானிட உடலேற்பைக் கொண்டாடுகிற விழா இது. இந்த ஆண்டு நமக்கு ஒரு சிறப்பான கிறிஸ்துமஸ் விழாவாக இருக்கிறது. 'தட்சனுக்கு பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும் இச்சனங்கள் சொன்னாலும் தெய்வ திருக்குமரா தாலேலோ' என்று இயேசு காவியத்தில் கவிஞர் கண்ணதாசன் தாலாட்டு பாடுகிறார்.
எனவே இப்பேற்பட்ட கடவுளுடைய திருக்குமாரன் பிறந்த நிகழ்வுதான் வரலாற்றை கி.மு., (கிறிஸ்துவுக்கு முன்), கி.பி., (கிறிஸ்துவிற்கு பின்) என பிரிக்கிறது. இந்த ஆண்டு நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிற பொழுது, நாம் எதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டும், எதை செய்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது தான். பழைய ஏற்பாட்டில் லேவியராகமம் குறிப்பிடுவது போல போதுமான ஓய்வை நிலத்திற்கும், கால்நடைகளுக்கும், நம்மிடம் வேலை செய்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும். முதலாளிகள் விரும்பும் போதெல்லாம் ஓய்வு தான். ஆனால் ஏழைகளுக்கும், நிலத்திற்கும், விலங்குகளுக்கும் நாம் ஓய்வு கொடுக்க வேண்டும். எனவே சுற்றுச்சூழலை பேணுபவர்களாக மாற வேண்டும். இப்போது சுற்றுச்சூழல் மாசுபட்டு இருக்கிறது. காற்று வெப்பமடைந்திருக்கிறது. அதனால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. அதன் காரணமாக எதிர்பார்க்காத இயற்கை சீற்றங்கள் ஏற்படுகிறது. எனவே இப்படி சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுபடுத்தினோம் என்றால் நாம் அழிந்து போவோம் என்பதை சொல்லும் கிறிஸ்துமஸ்- ஆக இருக்கிறது.
இரண்டாவதாக நம்மிலே கடன் வாங்குபவர்களும், கடன் கொடுப்பவர்களும் இருக்கின்றார்கள். இப்படி கடன் கொடுப்பவர்களிடம் சில பேர் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு 10 லட்சம் வரை வட்டி மட்டுமே கட்டியிருப்பார்கள். ஆனால், அசல் ஓய்ந்தபாடில்லாமல் அவர்கள் பல ஆண்டுகளாக கடன்காரர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர் களுடைய கடன்களை வட்டிக்காரர்கள் மன்னிக்க வேண்டும்.
இந்த கிறிஸ்துமஸ் எல்லோருக்குமான மகிழ்ச்சியை தர வேண்டும். குறிப்பாக ஏழை, வறியவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருவதாக இருக்க வேண்டும். ''Let thousand flowers bloom'' என்பது இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் செய்தியாக இருக்கட்டும்.
பிறக்கப்போகிற கிறிஸ்துமஸ் நமக்கு மகிழ்ச்சியும், சமூகத்தில் ஓய்வையும், யாருக்கெல்லாம் விடுதலை தேவையோ அவர்களுக்கு விடுதலையையும் கொண்டு வரட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
- லுார்து ஆனந்தம்
சிவகங்கை மறைமாவட்ட ஆயர்

