UPDATED : ஆக 08, 2026 06:58 PM
ADDED : ஆக 08, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கீழத்தெருவில் ஆகஸ்ட் 7 இரவு வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட டூவீலர்களை மர்ம நபர்கள் 6 அடி நீளமுள்ள வாளால் வெட்டி சேதப்படுத்தினர்.
ஒரு டூவீலருக்கு தீ வைத்தனர். சில வீடுகளின் கேட்டை உடைத்து கதவுகளை வாளால் வெட்டினர். தட்டி கேட்ட பெண்களை மிரட்டிவிட்டு தப்பினர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
