தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கழிவறை இல்லாத சமுதாயக்கூடம்

கழிவறை இல்லாத சமுதாயக்கூடம்

கழிவறை இல்லாத சமுதாயக்கூடம்


ADDED : மார் 04, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார் விவரங்கள் கேட்டு இருந்தார். 35வது வார்டில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கவில்லை. இங்கு கழிப்பறை உள்ளதா என கேட்டுள்ளார்.

அதற்கு கழிவறை உள்ளது என பதில் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு கழிவறை இல்லாததால், மாநகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்தார். கமிஷனரே நேரில் பார்வையிட்டார். கழிப்பறை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார்.

அதன்பின் மூன்று மாதங்களாகியும் கழிப்பறை கட்டப்படவில்லை. மீண்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டபோது, அங்கு கழிவறை வசதி செய்யப்படவில்லை என்று பதிலளித்துள்ளனர்.

வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், 'கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கின்றனர். கட்டடம் கட்டி பலமாதமாகியும் திறக்காததால் ஸ்திரதன்மை பாதிக்கிறது. கழிவறை இல்லாமல் சமுதாய கூடத்தை எப்படி பயன்படுத்துவது. அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது, கலெக்டரிடம் முறையிடுவேன் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us