தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்களுக்கு கலைப்போட்டி

மாணவர்களுக்கு கலைப்போட்டி

மாணவர்களுக்கு கலைப்போட்டி


ADDED : பிப் 17, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, : மதுரைக் கல்லுாரியில் பொருளியல் துறை, ஆராய்ச்சி மையம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரி, பல்கலைகளுக்கு இடையேயான 'மெக்னாமிக்ஸ் -2025' என்ற கலைப் போட்டிகள் நடந்தன. துறைத் தலைவர் தீனதயாளன் வரவேற்றார்.

எம்.சி.ஏ.ஏ., செயலாளர் கணபதி சுப்பிரமணியன், சுயநிதி பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் பேசினர்.

20க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர். தனிப்பாடல், கோலப்போட்டி, முக அலங்காரம், நெருப்பில்லா சமையல், குழு நடனம், தனி நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி கோப்பை வென்றது.

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சவுராஷ்டிரா கல்லுாரி முதல்வர் சீனிவாசன் பரிசு வழங்கினார்.

ஏற்பாடுகளை துறைத் தலைவர் தீனதயாளன், ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், இணை ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம், பேராசிரியர்கள், மாணவர்கள் செய்தனர். ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us