ADDED : மார் 05, 2024 04:10 AM

அ நிறம் | அளவு
மேலுார்,: திருச்சுனை, வைரவன்பட்டியைச் சேர்ந்தவர் சேது 40. பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் செல்லும் வாகனம் வைத்துள்ளார். நேற்று மாலை வாகனத்தில் பழுது ஏற்பட்டதால் மேலுாரில் சரி செய்தார்.
பின்னர் இரண்டு பயணிகளுடன் கருங்காலக்குடி சென்றார். தும்பைபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது இன்ஜின் பகுதியில் புகை வரவே பயணிகளை இறக்கினார்.
வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலுார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்
