/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடிக்கடி பள்ளமாகும் நான்கு வழிச்சாலை
/
அடிக்கடி பள்ளமாகும் நான்கு வழிச்சாலை
ADDED : நவ 05, 2024 05:35 AM

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் புதிதாக கட்டிய பாலத்தின் ரோடு பல முறை சேதமானதால் நான்கு வழிச்சாலையின் தரம் கேள்விக்குறியாகி வருகிறது.
கருங்காலக்குடியில் நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் 15 கிராமங்களும், மறுபுறம் பள்ளி, அரசு மற்றும் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. மக்கள் தங்களின் தேவைகளுக்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயலும் போது நுாற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்தனர். அதனால் பாலம் கட்ட துவங்கி மூன்றாண்டுகள் கழித்து பணி முடிந்தது. பிறகு லோக்சபா தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக பாலம் திறக்கப்பட்டது. ஏற்கனவே பலமுறை சிதிலமடையவே சரி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாலத்தின் மீது பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: ரூ.19 கோடி மதிப்பிலான பாலம் பிப்.13ல் திறக்கப்பட்டது. 9 மாதங்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவில் பாலத்தின் மீது வெளிச்சம் இல்லாததால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகுள்ளாவதால் வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். நான்கு வழிச்சாலையை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஒப்பந்ததாரரை கொண்டு தரமான ரோடு அமைக்க வேண்டும் என்றனர்.