/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்து டூவீலர்களை திருடி விற்ற கும்பல் கைது
/
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்து டூவீலர்களை திருடி விற்ற கும்பல் கைது
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்து டூவீலர்களை திருடி விற்ற கும்பல் கைது
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்து டூவீலர்களை திருடி விற்ற கும்பல் கைது
ADDED : ஜன 08, 2024 11:54 PM

மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மதுரை வந்து டூவீலர்களை திருடி விற்ற வந்த 4 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை நகரில் அடிக்கடி டூவீலர்கள் திருட்டு போயின. சமீபத்தில் தெப்பக்குளம் பகுதியில் சுடலைராஜ் என்பவரின் டூவீலர் திருடுபோனது. இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா, ஏற்கனவே உள்ள திருடர்களின் பதிவேடு அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தர்ம முனீஸ்வரன் 20, ஹரிகிருஷ்ணன் 28, முதுகுளத்துார் ஆண்டிசெல்வம் 23, கடலாடி ராம்கி 28, மதுரை வாழைத்தோப்பு பாலாஜி என்ற பட்டா கத்தி பாலாஜி 26, ஆகியோரை கைது செய்து டூவீலர்களை மீட்டனர்.
கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன், துணைகமிஷனர் பாலாஜி, உதவிகமிஷனர் காமாட்சி பாராட்டினர்.
போலீசார் கூறியதாவது: பாலாஜி மீது டூவீலர் திருடியதாக மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் 5 வழக்குகளும், கீரைத்துறையில் 4 வழக்குகளும் உள்ளன. ஏற்கனவே இவர் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கொடுக்கும் 'ஐடியா'படி கூட்டாளிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து டூவீலர்களை திருடி கேட்ட விலைக்கு விற்றுள்ளனர். கூட்டாளிகள் மீதும் பல்வேறு ஸ்டேஷன்களில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்களிடம் டூவீலர் வாங்கியவர்களிடம் விசாரணை நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட டூவீலர்களை இவர்கள் திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது என்றனர்.