/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்கலாம்
/
சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்கலாம்
ADDED : அக் 31, 2024 02:42 AM
மதுரை: தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் சிறுதானிய விவசாயிகள் குழு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது:
திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் மானாவாரியில் மக்காச்சோளம், சோளம், குதிரைவாலி, கம்பு, வரகு அதிகம் சாகுபடியாகிறது. சில இடங்களில் வரகு, பனிவரகு, சாமை பயிரிடப்படுகிறது. இந்த விவசாயிகள் குழுவாக இணைந்து செயல்பட்டால் குழுவிற்கு ரூ.1000 மானியம் வழங்கப்படும்.
மேலும் விதை, இடுபொருட்கள் வாங்குவதற்கு ஒரு எக்டேருக்கு எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு ரூ.2100, பொது விவசாயிகளுக்கு ரூ.1500 மானியம் வழங்கப்படும். ஒரு எக்டேருக்கான அங்கக உரங்கள் வழங்க ரூ.1500 மானியம் வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு 5000 எக்டேர், பொது விவசாயிகளுக்கு 5000 எக்டேர் வீதம் மானியம் வழங்க மதுரைக்கு ரூ.2.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.