/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒன்றிய அலுவலகத்தில் தொங்கு தோட்டமா
/
ஒன்றிய அலுவலகத்தில் தொங்கு தோட்டமா
ADDED : நவ 28, 2024 05:45 AM

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றிய அலுவலக வளாகத்தின் சுற்றுச்சுவரில் ஆங்காங்கே மரங்கள் வளர்ந்துள்ளதால் கட்டடம் வலுவிழந்து வருகிறது.
இந்த அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் வெளிப்புறத்தில் பல்வேறு வகையான மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. குறிப்பாக அரச மரம் 5 அடி உயரத்திற்கு மேல் ஆழமாக வேரிட்டு வளர்ந்துள்ளது. இச்சுவரை ஒட்டிய சாலை வழியாக முனியாண்டிபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
ஈரப்பதம் மற்றும் கழிவுநீர் கசிவால் சுவரில் எளிதாக மரங்கள் வளர்கின்றன. மரம் வளர வளர சுவர் இடியும் நிலையில் உள்ளது. பார்ப்பதற்கு 'பாபிலோனிய தொங்கு தோட்டம்' போல காட்சியளிக்கிறது. கழிவுநீர் கசிவை நிறுத்தி சுவரில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற ஒன்றிய நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.