தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பராமரிப்பின்றி பழுதான சுத்திகரிப்பு இயந்திரம்

பராமரிப்பின்றி பழுதான சுத்திகரிப்பு இயந்திரம்

பராமரிப்பின்றி பழுதான சுத்திகரிப்பு இயந்திரம்


ADDED : மார் 12, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலமேடு : அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் கிராம மந்தையில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் இயந்திரம் 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது.

இங்கு கடந்த 2014- - 15ல் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், அதற்கான கட்டடம், ஆழ்துளை கிணறு, குழாய்கள் ரூ.17.20 லட்சத்தில் அமைக்கப்பட்டது. கிராம மக்கள் காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் 'பிரீபெய்ட்' அட்டை மூலம் ஒரு குடம் நீர் ரூ.3க்கு வாங்கி பயன்படுத்தினர். மூன்றாண்டுக்கு முன் பழுதடைந்த இயந்திரம் தற்போது வரை பராமரிக்கப்படவில்லை.

தற்போது விநியோகிக்கப்படும் நீர் சலசலப்பு தன்மையுடன் இருப்பதாகவும், இதனால் வாகனங்கள் மற்றும் கேன்களில் வரும் குடிநீரை கூடுதல் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர். இயந்திரத்தை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us