/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காந்தி பற்றி அவதுாறு செய்தவர் காந்தி மியூசியத்தில் உதவ உத்தரவு
/
காந்தி பற்றி அவதுாறு செய்தவர் காந்தி மியூசியத்தில் உதவ உத்தரவு
காந்தி பற்றி அவதுாறு செய்தவர் காந்தி மியூசியத்தில் உதவ உத்தரவு
காந்தி பற்றி அவதுாறு செய்தவர் காந்தி மியூசியத்தில் உதவ உத்தரவு
ADDED : செப் 25, 2024 04:12 AM
மதுரை, : மகாத்மா காந்தி மீது அவதுாறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் படத்துடன் கருத்து வெளியிட்டதாக கல்யாணசுந்தரம் என்பவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி சிவகடாட்சம்: மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 15 நாட்களில் சரணடைய வேண்டும். சைபர் கிரைம் போலீசில் 30 நாட்களுக்கு தினமும் காலை 9:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மதுரை காந்தி மியூசிய நுாலகத்தில், புத்தகங்களை அடுக்கி வைக்க நுாலகருக்கு 15 நாட்கள் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.