/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பகலில் ஓர் இரவு அண்டர் பாஸ் பாலம்
/
பகலில் ஓர் இரவு அண்டர் பாஸ் பாலம்
ADDED : ஜன 03, 2026 05:22 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே மேலக்கோட்டை - கூடக்கோவில் ரோட்டில் உள்ள தண்டவாள பாதையில் அண்டர் பாஸ் பாலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
பாலம் அமைந்தது முதல் தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வந்தது. மழை நீர் தேங்கி நிற்பது, பொதுமக்கள் பாலத்தை கடக்க வழியின்றி போவது, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் பாலத்தின் கீழ் பாதையில் மழைநீர் செல்லாமல் இருக்க சில ஆண்டுகளுக்கு முன்பு கூரை அமைக்கப்பட்டது. இதனால் பகலில் பாலத்தில் வெளிச்சமின்றி இருளில் மூழ்கிக் கிடந்தது.
இதையடுத்து ஊராட்சி மற்றும் ரயில்வே நிர் வாகம் சார்பில் விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் பராமரிப்பின்றி சில மாதங்களாக விளக்குகள் எரியவில்லை. இதனால் பகலில் பாலத்தின் உள்ளே செல்ல முடியாமல் இருள் சூழ்ந்துள்ளது.
கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச் சத்துடனே செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே விளக்குகளை சீரமைக்கவும் புதிய விளக்குகளை அமைத்து தரவும் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

