தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : மார் 21, 2024 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 02:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோடு வேண்டும்

மதுரை மாநகராட்சி வார்டு 70 நேரு நகரில் சரியான ரோடு வசதி இல்லை. மக்கள் பயணிப்பது கடினமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மீனாட்சி, மாடக்குளம்.

பாதாள சாக்கடை சரிசெய்யப்படுமா

மதுரை சிங்கராயர் காலனி மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை இரும்பு மூடி உள்ளே பதிந்தும் வெளியே தெரியும்படியும் இருப்பதால் இரவில் பொதுமக்கள் தடுமாறி விழும் அபாயம் உள்ளது.

-- அபுபக்கர், பிபீகுளம்.

பழைய மின்கம்பம் இடையூறு

மதுரை பழைய குயவர்பாளையம் ரோட்டில் மின்கம்பம் ஒன்று நடுவில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாற்றி அமைக்க மின்வாரியம் முன்வரவேண்டும்.

-- சிவராமன், குயவர்பாளையம்.

ரோடு சீரமைப்பு தேவை

மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை சீரமைப்புக்கு பின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மணல் குவியலாக உள்ளதால் வீட்டுக்குள் துாசி வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.குமார், வானமாமலை நகர்.

கழிவுநீர் தேக்கம்

மதுரை மாநகராட்சி 44வது வார்டுக்குட்பட்ட வில்லாபுரம் புது மீனாட்சி நகரில் ஒரு மாதமாக கழிவுநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சித்ரா, வில்லாபுரம்.

குப்பை தேக்கம்

ஐராவதநல்லுார் ராமதாஸ் சேம்பர் அருகே பல நாட்களாக குப்பை அகற்றாமல் இருக்கிறது. மக்கள் நடந்து செல்ல கடினமாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராம், திருப்பரங்குன்றம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us