தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே!

ஒரு போன் போதுமே!

ஒரு போன் போதுமே!


UPDATED : நவ 22, 2026 03:54 PM

ADDED : நவ 22, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 03:54 PM ADDED : நவ 22, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வரி செலுத்துவோரின் தவிப்பு



மதுரை பாலரெங்காபுரம் ஜானகி மாதவைய்யர் தெரு ரோடு முழுவதும் அடிக்கடி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இங்கு குடியிருப்போர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே நடக்க முடியாமல் தவிக்கின்றனர். மாநகராட்சி வரி செலுத்துவோருக்கு இது தான் தண்டனையா

–- மாதவன், பாலரெங்காபுரம்

* தேங்கும் குப்பை



மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு விநாயகர் கோயில் பின்புறம் குப்பை தேங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் அள்ளப்படாததால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி விட்டது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

-– அருணா, வில்லாபுரம்.

* இறைச்சி கழிவுகளால் எரிச்சல்



மதுரை மகாத்மா காந்தி நகர் நர்மதா நதி மெயின் தெருவில் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடும், துர்நாற்றமும் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–- சுரேஷ்குமார், மகாத்மா காந்தி நகர்.

* சாக்கடை குடிநீரா



மதுரை ஞானஒளிவுபுரம் சகாய மாதா தெருவில் குடிநீருக்கு பதிலாக சாக்கடை நீர் வருகிறது. அதிகாரிகளிடம் புகாரளித்தும் பயனில்லை.

- – பாலசுப்பிரமணியன், ஞானஒளிவுபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us