/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் திருவிழாவுக்கு தயாராகி வரும் தெப்பம்
/
குன்றத்தில் திருவிழாவுக்கு தயாராகி வரும் தெப்பம்
ADDED : ஜன 15, 2024 04:20 AM

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றத்தில் ஜன. 21ல் நடக்கும் தெப்பத் திருவிழாவிற்காக மிதவை தெப்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இக்கோயிலில் ஜன. 12ல் கொடியேற்றத்துடன் துவங்கிய தெப்பத்திருவிழாவில் சுவாமி தினமும் ஒரு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். தெப்பத் திருவிழா அன்று ஜி.எஸ்.டி., ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர்.
பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்திருவிழா நடைபெறும். அதற்காக தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணி நடக்கிறது. தெப்பக்குளம் துாய்மைப்படுத்தப்பட்டு சுற்றுச் சுவர்கள், மைய மண்டபத்தில் சிவப்பு, காவி நிறங்கள் தீட்டப்படுகின்றன.