ADDED : பிப் 04, 2024 03:57 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க சங்கக்கூட்டம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. உதவி செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார்.
நிர்வாகி தமிழரசி அருள் விளக்கு ஏற்றினார். அகவல் படிக்கப்பட்டது.
ஜீவகாருண்யம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. சன்மார்க்க சங்கம் மற்றும் நடராஜன் குடும்பத்தார் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. செயலாளர் நல்லுசாமி நன்றி கூறினார்.
