/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரிய வகை உயிரினம் வாழும் கல்லங்காடு
/
அரிய வகை உயிரினம் வாழும் கல்லங்காடு
ADDED : அக் 06, 2025 05:59 AM

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி ஒன்றியம் கல்லங்காட்டில் காட்டு உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் பறவைகளை காக்க 18 கிராம மக்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஒன்றியத்தில் பூதமங்கலம், கொடுக்கம்பட்டி, வஞ்சிநகரம் ஊராட்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கல்லங்காடு அமைந்துள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
கல்லங்காட்டில் புள்ளிமான், நரி, பச்சோந்தி, உடும்பு, தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் சாம்பல் நிற தேவாங்குகள், வலைவரையன் பாம்பு உள்ளிட்ட காட்டு உயிரினங்கள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் கலா, காரை, குருந்தம், நீர்கடம்பு, திருக்கள்ளி, இலுப்பை உள்ளிட்ட அரிய வகை மூலிகைத் தாவரங்களும் இருப்பதை 2024 அக்டோபரில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையினர் ஆவணமாக்கி உள்ளனர்.
மதுரையை சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களும் படமாக்கி வெளியிட்டுள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பகுதியில் சிப்காட் அமைந்தால் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படும். அதனால் அரசு இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என 18 கிராம மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.