தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சமையலறை இல்லாத பள்ளி

சமையலறை இல்லாத பள்ளி

சமையலறை இல்லாத பள்ளி


ADDED : ஜன 05, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அச்சம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளியில் சமையலறை இல்லாததால் வகுப்பறை அருகே திறந்தவெளியில் சத்துணவு சமைக்கின்றனர்.

இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். சேதமடைந்த சமையலறை சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் அருகே தகர ெஷட்டில் பாதுகாப்பாற்ற முறையில் விறகு அடுப்பில் உணவு சமைத்தனர். சில நாட்களாக வகுப்பறை அருகே மாடி படிக்கட்டுக்கு கீழ் பாதுகாப்பற்ற சிறிய அறையில் சிலிண்டர் வைத்து சமைக்கின்றனர்.

இதனால் உணவு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதென பெற்றோர் கருதுகின்றனர். புதிய சமையலறை கட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us