/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சிறையில் இருந்த ஒரு மோப்ப நாயும் இறந்தது போதைப்பொருட்களை கண்டறிவதில் சிக்கல்
/
மதுரை சிறையில் இருந்த ஒரு மோப்ப நாயும் இறந்தது போதைப்பொருட்களை கண்டறிவதில் சிக்கல்
மதுரை சிறையில் இருந்த ஒரு மோப்ப நாயும் இறந்தது போதைப்பொருட்களை கண்டறிவதில் சிக்கல்
மதுரை சிறையில் இருந்த ஒரு மோப்ப நாயும் இறந்தது போதைப்பொருட்களை கண்டறிவதில் சிக்கல்
ADDED : ஜன 18, 2025 05:39 AM

மதுரை : மதுரை மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கண்டறிந்து வந்த மோப்ப நாய் அஸ்ட்ரோ 10, உடல்நலக்குறைவால் நேற்று இறந்தது. சிறையில் இருந்த இரு மோப்ப நாய்களும் அடுத்தடுத்து இறந்ததால் சிறை வளாகத்தில் போதைப் பொருட்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லேப்ரடார் வகையைச் சேர்ந்த அஸ்ட்ரோ, பிறந்த 10வது மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கண்டறிவதில் பயிற்சி பெற்று இச்சிறையில் 2015 அக்.,7ல் பணியில் சேர்ந்தது. தினமும் காலை, மாலை சிறை வளாகத்தை உள்ளே, வெளியே சுற்றி வந்து போதைப்பொருட்கள் உள்ளதா என சோதனை செய்யும்.
பூமிக்குள் மறைத்து வைத்திருந்த கஞ்சா போன்றவற்றை கண்டுபிடித்து பாராட்டை பெற்றது. 'டி.எஸ்.பி.,' ராங்க் தகுதியுடைய அஸ்ட்ரோ, சில நாட்களாக உடல்நலம் பாதித்திருந்த நிலையில் நேற்று காலை இறந்தது. அரசு மரியாதையுடன் சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அஞ்சலி செலுத்தினார்.
அஸ்ட்ரோவுடன் அர்ஜூன் என்ற மோப்ப நாயும் பணியில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அதுவும் உடல்நலமின்றி இறந்தது. இச்சிறைக்கு இருந்த இரு மோப்ப நாய்களும் இறந்ததால், சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவீன உபகரணங்களை கொண்டு சோதனை செய்தாலும், நாய்களின் மோப்பத்திறனுக்கு ஈடாகாது. அர்ஜூன் இறந்தவுடனே வேறு ஒரு குட்டி நாயை பழக்கப்படுத்தி சோதனைக்கு பயன்படுத்த அரசுக்கு பரிந்துரைத்திருக்க வேண்டும்.
ஆனால் சிறை நிர்வாகம் அதற்கான முயற்சியை மேற்கொள்ளாத நிலையில் இருந்த ஒரு மோப்ப நாயும் இறந்துள்ளது. வேறு சிறையில் இருந்து மோப்ப நாயை இரவல் வாங்கி நிலைமையை சமாளிப்பதற்கு பதில் இரு குட்டி நாய்களை புதிதாக வாங்க டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளுக்கு சிறை நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்கின்றனர் காவலர்கள்.