ADDED : நவ 28, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலுக்கு சொந்தமில்லாத சுக்கிரன் சிலையை, வருவாய் அலுவலர்கள் மீட்டு மதுரை அரசு மியூசியத்தில் ஒப்படைத்தனர்.
மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது: கோயிலின் செயல் அலுவலர் அக்கோயிலுக்குச் சொந்தமில்லாத சுக்கிரன் சிலையை அங்கு யாரோ வைத்து சென்றதாகக் கூறி, வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் அச்சிலையை ஒப்படைத்துள்ளார். அதை தாசில்தார் ராமச்சந்திரன் அரசு மியூசியத்தில் ஒப்படைத்தார். 28 செ.மீ., உயரம், 30 செ.மீ., அகலத்தில் 20ம் நுாற்றாண்டில் கிரானைட் கல்லில் சுக்கிரன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுக்கிரனுக்கு உரிய ஆயுதங்கள் சிலையில் இடம்பெற்றுள்ளது. யாரோ அபிஷேகம் செய்த நிலையில்தான் சிலையை விட்டுச் சென்றுள்ளனர் என்றார்.