/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகை வடகரையில் 3.5 கி.மீ.,க்கு சுவர்
/
வைகை வடகரையில் 3.5 கி.மீ.,க்கு சுவர்
ADDED : மே 08, 2025 03:36 AM

மதுரை: மதுரை வைகை வடகரையில் சமயநல்லுார் வரையான ரோடு 3.5 கி.மீ., தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பருக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வைகை வடகரையோரம் செங்கோல் நகர் முதல் சமயநல்லுார் வரை 8 கி.மீ., ரோடு அமைத்து வருகின்றனர்.
ரூ.176 கோடி மதிப்பில் அமையும் இந்த ரோடு 50 அடி அகலத்தில் இருவழிப்பாதையாக அமையும். இதற்காக கரையோரம் 3.5 கி.மீ., தொலைவுக்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
அதையொட்டி 1.5 கி.மீ., தொலைவுக்கு மண்மேவி ரோடாக மாற்றி வருகின்றனர். இந்த சுவர் ஓரம் மரக்கன்றுகளையும் நட்டு பராமரிக்க உள்ளனர்.
இப்பணிகளை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதையடுத்து கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சீத்தாராமன் ஆகியோர் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.

